நாசாவால் கூட முடியாத காரியம் !

0
426

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்டிருந்த ”விக்ரம் லேண்டரை” நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி, உலக சாதனை நிகழ்த்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டது. இந்த நிலையில், கடந்த ஜூலை 22 ஆம் திகதி, GSLV மார்க் 3 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஏவப்பட்ட ரொக்கெட் சரியான பாதையில் விண்ணில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி அதிகாலை பொழுதியில் ”சந்திரயான் 2 ” விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது.

ஆனால், நிலவிலிருந்து 2.1 KM தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டமை காரணமாக, சந்திரயான் 2 விண்கலத்தை நிலவில் நிலை நிறுத்தும் இஸ்ரோவின் திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும், தங்களின் முயற்சியை கைவிடாமல் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை !
Next articleஅப்துல் கலாமிற்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றியவர்!