நள்ளிரவில் நிகழ்ந்த கொடூரம்! வீட்டில் மகளுடன் தனியாக இருந்த பெண் செய்தியாளர்!

0
449

வங்கதேச தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் அவர் வீட்டில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஆனந்தா டிவி என்னும் செய்தி தொலைக்காட்சி சேனல் வங்கதேசத்தில் புகழ்பெற்ற தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சியில் சுபர்ணா நோடி என்னும் 32 வயதான பெண் செய்தியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் வங்க தேச தலைநகரான டாக்கவில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள பப்னாவில் ராதாநகர் என்னும் பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போது இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறக் காத்திருக்கும் இவர் தனது 9 வயது மகளுடன் தனியாக ராதாநகரில் வசித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10.45 மணி அளவில் இவருடைய வீட்டுக்கு இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் சுபர்ணா வீட்டுக்கு வந்துள்ளனர். அழைப்பு மணியை அடித்த அவர்களிடம் சுபர்ணா வந்து பேசி உள்ளார்.

அப்போது அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அருகில் வசிப்போர் இந்த விவரம் அறிந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

காவல்துறையினர் சுபர்ணாவை கொன்ற கொலையாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் காவல்துறையினரை வற்புறுத்தி உள்ளனர்.

Previous articleஒக்ஸ்வோட் பகுதியில் புரியாத புதிராக விரிவடைந்து வரும் புதைகுழி!
Next article30.08.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 14, வியாழக்கிழமை!