லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், விஜய் சேதுபதி இணைந்து ஜோடியாக நடித்த படம் நானும் ரவுடி தான். விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இதன் பின் தற்போது இணைந்து நடித்துள்ள படம் சயீரா நரசிம்ம ரெட்டி. தெலுங்கில் சுதந்திர போராட்ட வீரரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மெயின் ரோலில் நடித்துள்ளார்.
அவருடன் நயன்தாரா ராணி வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தமிழ் நாட்டில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறார்கள் என தற்போது சொல்லப்பட்டு வருகிறது.