நயந்தாராவுக்கு திருமணம் ! கல்யாண புடவையின் விலை இத்தனை லட்சமா?

0

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாகவே திருமனத்தை முடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், திருமணத்தை கேரளாவில் உள்ள சர்ச் அல்லது லண்டனில் வைத்து கொள்ளலாம் என்று நயன் குடும்பத்துடன் ஆலோசித்து வருவதாகவும், தன் திருமணத்திற்காக இத்தாலியில் உள்ள ஒரு பிரபல ஆடை வடிவமைப்பாளரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள புடவைக்கு அவர் ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, நயன் சில காதல்தோல்விகளை சந்தித்து பின்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்வதால், திரையுலகில் யாரையும் அழைக்க விரும்பவில்லையாம். நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலலிதா ஜீவல்லரி கொள்ளையனால் அடுத்தடுத்து பீதி.. அலறியடித்து பரிசோதனைக்கு ஓடும் நடிகைகள்!
Next articleஇடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் ! வீட்டு பூஜை குறிப்புகள் 80 !