நமக்கே தெரியாமல் செய்யக் கூடிய ஆண்மிக தவறுகள் பற்றி தெரியுமா?

0
1040

கடவுளை வணங்கும் போது கோவிலிலும் சரி வீட்டிலும் சரி நம்மை அறியாமலே சில தவறுகளை செய்கிறோம்.

அதனால் நாம் நினைத்து வழிபடக்கூடிய சில நல்ல காரியங்களும் தடைபடுகிறது. இதை நிவர்த்தி செய்ய உதவும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

திங்கட்கிழமைகளில் பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை எக்காரணம் கொண்டும் கையால் தொடக்கூடாது.

அதே போல வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது.

விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் போது அதில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடக் கூடாது.

அது மட்டுமில்லாமல் கையில் இருக்கும் அந்த எண்ணெயை தலையில் எக்காரணம் கொண்டும் தடவக் கூடாது.

சாமி படங்களில் இருக்க கூடய காய்ந்த பூக்களை உடனே அகற்ற வேண்டும்.

விஷ்ணு கோவிலுக்கு சென்று வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம்.

எனவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் அங்கே அமரக் கூடாது.

ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளேயோ அல்லது நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையில் எடுத்து செல்வதன் மூலம் செல்லும் காரியம் வெற்றியோடு முடியும்.

வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம், வெற்றி, தனலாபம் போன்றவை அதிகரிக்கும்.

Previous articleஅழகை கெடுக்கும் கருவளையத்தை போக்க சில டிப்ஸ்!
Next articleபித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ்!