நடைபெறவுள்ள 73வது சுதந்திர தின நிகழ்வில் இசைக்கப்படும் தேசிய கீதத்தில் தமிழ் மொழிக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது ! வெளியானது அறிவிப்பு !
இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை காரணமாக, இந்த முறை சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அனைத்து படையினரும் பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரிசோதனை அறிக்கைகள் ஒழுங்காக இருந்தால் மாத்திரமே படையினர் அணிவகுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆதாரம்: ஜேவிபி செய்திகள்