நடுரோட்டில் வைத்து ஆட்டோ ஓட்டுநரை சரமாறியாக தாக்கும் பொலிஸார்கள்! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ!

0

டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை பொலிசார் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் முகர்ஜி நகர் சாலையில், பொலிஸ் வாகனத்தின் மீது ஆட்டோ ஒன்று மோதியதாக தெரிகிறது.

இதையடுத்து காவலர்கள் அந்த ஆட்டோ ஓட்டுநரை விசாரிக்க முயற்சி செய்தனர். அப்போது சீக்கியரான ஆட்டோ ஓட்டுநர் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால், பொலிசார்கள் குறித்த ஓட்டுநரை நடுரோட்டில், கீழே தள்ளி லத்தியால் சரமாறியாக தாக்குகின்றனர்.

தடுக்க வந்த ஆட்டோ ஓட்டுநரின் மகனையும் காவலர்கள் சுற்றி வளைத்து சரமாரியாக லத்தியால் தாக்குகின்றனர்.

இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇளம் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து பாலியல் துன்புறுத்தல்! 4 பெண்களின் கோர முகம்!
Next articleஇலங்கை அணியில் இது தான் பிரச்சினை! முதலில் இதை சரி செய்யுங்கள்! ஜம்பவான் ஜெயவர்தன அறிவுரை!