நடுரோட்டில் இளம்பெண்ணின் ஆடையை கழற்றி கொடுமை செய்த கும்பல்! பொலிசார் செய்த செயல்!

0
533

பீகாரில் பலவந்தமாக பெண்ணின் ஆடையை கழற்றி கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் ஜெனாபாத் அருகே பெண் ஒருவரை இளைஞர்கள் சிலர் கட்டாயப்படுத்தி ஆடையை கழற்றிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உதவிக்கு யாராவது வாருங்கள் என அப்பெண் கெஞ்சிய போதும் யாரும் அப்பெணுக்கு உதவ முன்வரவில்லை.

மேலும், அந்த பெண் எவ்வளவு கதறியும் யாரும் காப்பாற்ற முன்வராததை அடுத்து, அந்த பெண்ணை மேலும் மேலும் தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மகிழ்ந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, 8 பேர் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நிலையில் 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் தொடர்புயை நபர்களை பிடிக்க போலீசார் வீடு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்னும் இரண்டு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமா..? குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்வதும், பெண்களை கடத்தி கற்பழிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Previous articleநண்பன் பட மில்லிமீட்டரா இது? அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார் பாருங்களேன்!
Next article25 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த மிலன் தேனிலவு போட்டோ வெளியிட்டு அதிர்ச்சியாக்கினார்- புகைப்படம் உள்ளே!