Home thatstamil one india tamil oneindia tamil நடிகை மோனலின் தற்கொலை தடையங்களை அழித்தாரா மும்தாஜ்!

நடிகை மோனலின் தற்கொலை தடையங்களை அழித்தாரா மும்தாஜ்!

0
741

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம்வந்த மும்தாஜ் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்துகொண்டு தற்போது ரசிகர்கள் மனதில் மீண்டும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இவரைப் பற்றி அறியாத சில பக்கங்கள் இதோ 1980ம் ஆண்டு மும்பையில் பிறந்த இவரது உண்மையான பெயர் நக்மா கான். மொடலிங் செய்து வந்த இவர், டி.ராஜேந்தர் இயக்கத்தில் மோனிஷா என் மோனாலிஷா என்ற படத்தில் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்திற்குப் பின்பு தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார். குஷி படத்தின் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பிரபலமானார்.

2007ம் ஆண்டு தனது குருநாதர் எனக் கூறிக்கொள்ளும் டி.ராஜேந்தரின் வீராச்சாமி படத்தில் நடித்தார். பின்பு உடல் எடை அதிகரித்த காரணத்தால் அதிகமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த இவர், 2004ம் ஆண்டு நடிகை சிம்ரனின் தங்கை மோனல் தற்கொலை விவகாரத்தில் சிக்கினார்.

டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் காதலித்தாகவும், இதற்கு கலா மாஸ்டரின் குடும்பம் சம்மதம் தெரிவிக்காமல் இருந்தது மட்டுமின்றி, தொலைபேசியிலும் மோனலை மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனுமுடைந்து காதலில் பிரசன்னா பின்வாங்கியதால் மனம் வெறுத்துப் போன மோனல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சிம்ரன் தெரிவித்திருந்தார்.

இதில், கலா மாஸ்டரின் தூண்டுதலின் பேரில், மோனல் வீட்டிலிருந்த சில முக்கிய சாட்சியங்களை மும்தாஜ் கலைத்துள்ளார் என்று சிம்ரன் குற்றம் சாட்டியதால், பொலிசார் மும்தாஜிடம் விசாரணை நடத்தினார்களாம்.

இந்த சர்ச்சைக்குப் பின்பு, 2009ம் ஆண்டு ராஜாதி ராஜா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் அந்த அளவிற்கு வரவேற்பைப் பெறாத காரணத்தால் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்துள்ளார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன மும்தாஜை முதலில் பார்க்க வந்தது கலா மாஸ்டர் தான் என்பது அனைவருக்குமே தெரியும். குறித்த காணொளி இதோ உங்களுக்காக!

Previous articleமறந்தும் பெண்களிடம் செய்துவிட கூடாத சத்தியங்கள்! சூதானமா இருக்கோணும் ஆண்களே!
Next articleஇந்த குழந்தையை திடீர் என படுக்கவைத்து பாதுகாத்த சக்தி எது? புல்லரிக்க வைக்கும் காட்சி!