நடிகை அசின் ஒருகாலத்தில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு குட்பை சொன்னார்.
பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு தற்போது ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் விரைவில் அசின் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தி சினிமா மற்றும் தென்னிந்திய பட வாய்ப்புகளையும் அவர் தற்போது பரிசீலித்து வருகிறாராம்.