நடிகர் விஷால் கைதாகிறார்? ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

0
695

வருமான வரித்துறை சம்மனுக்கு ஆஜராகததால் நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கிய பணத்துக்கு வரிப் பிடித்தம் செய்துள்ளது. அவ்வாறு பிடித்தம் செய்த வரித்தொகையை, நிறுவனத்தின் உரிமையாளர் நடிகர் விஷால் வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து வருமான வரித்துறை, நடிகர் விஷாலுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 -ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.

ஆனால் அவர் நேரில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அவர் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Previous articleகவினுடன் காதலா? நள்ளிரவில் இதுதான் நடந்தது! அனைவரின் முன்னிலையில் லொஸ்லியா !
Next articleமுட்டக்குஞ்சு லொஸ்லியா இரவு தூங்கும் முன் இதை பண்ணிடுவாங்களாம் !