நடிகர் விஷாலை நான் திருமணம் செய்ய போவதில்லை! தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன்!

0

நடிகர் விஷாலை திருமணம் செய்யப்போவதில்லை மாறாக நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் எனக்கு ஒரு நல்ல நெருக்கமான நண்பர், எல்லா விஷயங்களையும் இருவரும் ஷேர் செய்து கொள்வோம். ஆனால் நாங்கள் காதலிக்கிறோம், டேட்டிங் செல்கிறோம் என்று வரும் தகவல்களில் துளியும் உண்மை இல்லை.

விஷாலுடன் எனக்கு திருமணம் என்பது இல்லை, மேலும் விஷாலுக்கு நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பேன். அவர் திருமணம் செய்துகொண்டால் முதல் ஆளாக மகிழ்ச்சியடையப் போவது நான்தான். விஷயம் இப்படி இருக்க எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் இன்னும் புரியவில்லை.

அரசியல் பேச்சு
மேலும், தமிழகத்தில் அரசியலில் காலியிடம் உள்ளது. அந்த காலியிடத்தை நிரப்பத்தான்,ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள்.ஆனால் மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா சிறப்பான ஆளுமை மிக்க ஒரு தலைவர். எனக்கு இதுவரை அவருடன் 3 முறை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசியலில் அவர் எனக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார்.தனிமரமாக மொத்த மாநிலத்திலும் ஆளுமை செலுத்தினார்.

அரசியலுக்கு வருவேன்
நான் இன்னும் 5 வருடங்களில், அரசியலுக்கு வருவேன். எனது தந்தை என்னை அவரது கட்சியில் சேருவதற்கு ஏற்கனவே அழைப்பு விடுத்தார். நான்தான் மறுத்துவிட்டேன். நான் தந்தை கட்சியில் சேர்ந்து அரசியலுக்கு வர மாட்டேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை பிறகு தெரிவிக்கிறேன்’என ஒரு அரசியல் என்ரியை கொடுத்துள்ளார் வரலக்ஷ்மி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅதிரடி திருப்பங்களோடு காத்திருக்கும் அடுத்த சில தினங்கள்! அமெரிக்காவின் ஆதரவோடு கூட்டமைப்பு!
Next articleமுதலில் அண்ணணுக்கு கல்யாணம் அடுத்து தான் எனக்குனு சொன்னா!