கடந்த வாரத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மனதை வென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன்.
மொடலாக வலம்வந்த இவர் சினிமா வாய்ப்பிற்காக படாத கஷ்டம் இல்லை. வாழ்வில் பல கஷ்டங்களைக் கடந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் புகழைத் தேடி தந்துள்ளது.
வெளியே வந்த தர்ஷன் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி அவர்களுடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றார். இந்நிலையில் தர்ஷன் இளையதளபதி விஜய்யின் தாய் ஷோபனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.
அதிகமான லைக்ஸ்களை வாங்கி வரும் இப்புகைப்படத்தில், தர்ஷன் எதற்காக சந்தித்தார் விஜய் குடும்பத்தினை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே போல நேற்று தான் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் ட்ரைலரும் வெளியாகி இருந்தது. இதனால் தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் படத்தின் ட்ரைலரை பகிர்ந்திருந்தார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியானது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வின் போது தர்ஷனுக்கு கமல், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பேட்ஜை அளித்து, அவரை ஒரு நல்ல பாதையில் அழைத்துச் செல்வது எனது கடமை என்று மேடையில் அறிவித்தார். எனவே, தர்ஷன் விரைவில் கமல் படத்தில் நடிப்பார் என்று தர்ஷன் ரசிகர்கள் மிகந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.