நடிகரின் வாழ்வில் நேர்ந்த துயரம்! தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை திருமணம்!

0
514

நடிகர் மிலிந்த் சோமன் தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த நிலையில், தற்போது தனக்கு பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகர் மிலிந்த் சோமன்(51) தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் உட்பட சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

பிரபல மொடலான இவர், மைலேனி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிதா கொன்வார் எனும் 18 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களது வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்ததால் பலரும் விமர்சனங்களை முன் வைத்தனர்.

இந்நிலையில், மிலிந்த் தனக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘தங்கள் படத்தில் என்னை நடிக்க வைக்க மறுக்கின்றனர். ஏன் என்னை அழைக்க தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அதுதான் நிஜம். அவ்வப்போது எனக்கு சினிமா வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன.

நானும் நடித்துக் கொண்டிருந்தேன். நடிப்பில் எனக்கு விருப்பம் அதிகம். அதிக வருமானம் வரும் வேலை, நடிப்பு, மற்ற நடிகர்களை போல நானும் அதை பெற்றுக் கொண்டிருந்தேன். ஆனால், சமீபத்தில் வாய்ப்பு ஏதும் வரவில்லை.

கமர்சியல் சினிமாவில் நெட்வொர்க் முக்கியம். எனக்கு அப்படியொரு நெட்வொர்க் ஏதும் இல்லை. சினிமாவில் அதிகமாக நண்பர்களும் இல்லை. எந்தவொரு வணிகத்திற்கும் நெட்வொர்க் முக்கியம்.

நான் அதிகமாக படங்கள் பார்ப்பதில்லை. வருடத்தில், மூன்று படங்கள் பார்த்தாலே அதிகம். அதுவும் சூப்பர் ஹீரோ படங்கள் தான். சினிமாவில் நடிக்க ஆசை கொண்ட எனக்கு படங்கள் பார்ப்பதில் விருப்பமில்லை. ஒருவேளை இந்த காரணத்துக்காகவே எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

Previous articleகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பேரதிர்ஷ்டம்!
Next articleகுருபெயர்ச்சி 2018 -2019: ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள்!