தோழியின் சூசகப் பதிவால் அம்பலமான ரகசியம்! ஹீரோயினாகும் ஈழத்து பெண்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!

0

தோழியின் சூசகப் பதிவால் அம்பலமான ரகசியம்! ஹீரோயினாகும் ஈழத்து பெண்! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்! இலங்கை பெண் லொஸ்லியாவின் தோழி ஒருவர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லொஸ்லியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சில எமோடிகான்களை போட்டுள்ளார். அதில், ஒரு முட்டை உடைவது போலவும், ஒரு கை குறிப்பிடும் திசையில் ஸ்டார் ஒன்று இருப்பது போலவும் உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் லொஸ்லியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதை தான் அவரது தோழி பூடகமாக தெரிவித்திருக்கிறார் என யூகித்துள்ளனர்.

இது குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலானதினால் லொஸ்லியா ஆர்மிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லொஸ்லியாவின் சினிமா பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிட வில்லை. எனினும், அவர் ஜிம்மில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுப்படும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்களும் அவர் அடுத்த புராஜெக்டிற்காகதான் எடையை குறைக்க ஜிம்மிற்கு செல்கிறார் என கருத்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், தோழியின் பதிவால் அது அம்பலமாகியுள்ளது. இதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து!
Next articleபயணிகளை உற்சாகப்படுத்தும் பன்றி, அமெரிக்க விமான நிலையத்தில்!