தொண்டை கரகரப்பு, சளித்தொல்லை, ஜலதோசம் என்பவற்றிற்கு தீர்வு தரும் மணத்தக்காளி!

0

பாட்டி வைத்தியம்

அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து அதன் சாற்றைக் குடித்தால் சளி நீங்கும்.

ஆகாயத்தாமரை இலைச்சாறுடன் பன்னீர் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், மூச்சிரைப்பு குணமாகும்.

ஆடாதொடா இலை, வேர் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல், காய்ச்சல் குணமாகும்.

ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலையில் தேய்த்துக் குளித்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, தலைவலி நீங்கும்.

இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

இஞ்சியுடன் தேன், லவங்கப் பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டு குணமாகும்.

கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.

கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் மூக்கில் நீர் கொட்டுதல், தலைவலி குணமாகும்.

கிராம்பை நீர் சேர்த்து மை போல அரைத்து நெற்றி, மூக்கில் பற்றுப் போட்டால் மூக்கடைப்பு குணமாகும்.

குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் தொண்டைக் கட்டு சரியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதங்க கழிப்பறையை இழக்கும் விஜய் மல்லையா: ஏன் தெரியுமா?
Next articleஇன்றைய ராசிப்பலன் – 27.11.2018 செவ்வாய்க்கிழமை !