தேசிய தினத்தை கொண்டாடும் இலங்கை! யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி!

0
440

இலங்கை இன்றைய தினம் 71வது தேசிய தினத்தை கொண்டாடி வருகிறது.

எனினும் தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடி காட்டப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று கறுப்பு கொடி பறக்க விடப்பட்டு மாணவர்கள் தமக்கு சுதந்திரம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும் கறுப்புக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களுக்கு சுதந்திரமில்லாத இன்றைய நாளை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு ஏற்கனவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தேசிய தினத்தை கொண்டாடும் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநடிகர் தனுஷ்க்கு மகிழ்ச்சியுடன் இனிப்பு ஊட்டும் சிம்பு! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்! டிரெண்டாகும் வீடியோ!
Next articleமீண்டும் விஜயகலா விவகாரத்தில் வெடித்தது புதிய சர்ச்சை!