தெற்காசிய பூப்பந்து! புதுகை வீரருக்கு தங்கம்!

0

பூடான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரர் தங்கம் வென்றார்.

இப்போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டியில், மூத்தோர் ஒற்றையர் பிரிவு பூப்பந்தாட்டப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜனகன்(24), பூடான் நாட்டு வீரரை 21-19, 17-21, 22-20புள்ளிக் கணக்கில் வென்று, தங்கம் பெற்றார்.

இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜனகனுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆபாச ‘டிக்டாக்’ மோகம்! உஷார் பெண்களே!
Next articleபிரபல நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த நூடுல்ஸ்! என்ன இருந்தது தெரியுமா!