தென்னிலங்கையில் பெண்களை தாக்கிய குள்ள மனிதர்களால் பதற்றம்!

0
613

தென்னிலங்கையில் விசித்திர உருவம் கொண்ட குள்ள மனிதர்கள் ஐந்து பேர் பெண்களை தாக்கியமையினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாத்தறை, தொட்டமுன என்ற மீன்பிடி கிராமத்தில் நேற்றிரவு மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு 8.30 மணியளவில் தொட்டமுன கிராமத்தில் மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் விசித்திர உருவம் கொண்ட குள்ள மனிதர்கள் 5 பேர், தங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

அந்த குள்ள மனிதர்களிடம் இருந்து தங்கள் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

நீண்ட போராட்டத்தின் மத்தியில் அவர்களிடமிருந்து தப்பித்தாகவும் இதன்போது ஆடைகள் கிழிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து அதிர்ச்சியடைந்த மக்கள் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இரவு முழுவதும் அந்த மக்கள் உறங்காமல் வீதிகளில் நின்றதாகவும் பதற்றமடைந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Previous articleஇலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை! வரும் புதிய நடைமுறை!
Next articleபதினைந்து வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பாடசாலை ஆசிரியர் பொலிஸாரால் அதிரடியாக் கைது!