திருமண ஆசையில் பரிதவிக்கும் எம்.எல்.ஏ! தீயாய் பரவும் அழைப்பிதல்! மாயமான மணப்பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

0
510

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனின் திருமணம் எதிர்வரும் 12 ஆம் திகதி அன்று நடைபெற இருந்தது.

கடத்தூரைச் சேர்ந்த ஆர்.சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கே பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.ஈஸ்வரனை நிச்சயம் செய்துள்ளனர்.

ஆனால், இந்த திருமணம் பிடிக்காமல் மணப்பெண் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இந்நிலையில், மணமகள் சந்தியா கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன் போது, குறித்த பெண் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. நான் பலமுறை திருமணம் வேண்டாம் என கூறினேன். ஆனால், எம்.எல்.ஏ., என்று என் வீட்டில் கட்டாயப்படுத்தினார்கள்.

எனக்கும் நிச்சயிக்கப்பட்ட எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் 23 வயது வித்தியாசம் உள்ளது. அவருக்கு வயது 43. எனது வயது 23. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? இதனால் தான் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் நான் வீட்டை வீட்டு சென்றேன் என மணப்பெண் சந்தியா கூறியுள்ளார்.

இதன்பின் பெற்றோரை அழைத்த நீதிபதி, சந்தியாவை எந்த விதமான தொந்தரவும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில், சந்தியாவை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

விக்னேஷ் என்ற வாலிபரை சந்தியா காதலித்து வந்துள்ளார். இதையடுத்து பொலிசார் விக்னேசை பிடித்தனர். பின்னர் அவர் மூலம் சந்தியா தோழி ஒருவரின் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதனால் பொலிசார் விக்னேசிடம், சந்தியாவிடம் பேசி ஏதாவது ஒரு இடத்திற்கு வரும்படி கூறினர். அதன்படி விக்னேஷ் சந்தியாவுடன் பேசினார். இதையடுத்து சந்தியா அங்கிருந்து விக்னேஷ் கூறிய இடத்துக்கு புறப்பட்டார்.

அப்போது பொலிசார் பின் தொடர்ந்து சென்று விராலிமலை சாலையில் வைத்து சந்தியாவை மடக்கிப் பிடித்தனர்.

தற்போது சந்தியா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 43 வயதில் திருமண ஆசை வந்த எம்எல்ஏ குறித்த திகதியில் தனக்கு திருமணம் நடைபெறும் என்றும் அதற்காக வேறு ஒரு பெண்ணை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Previous articleவிஜய் செய்த விஷயம்- நெகிழும் சின்னத்திரை பிரபலம்
Next articleஒரு பெண் 4 ஆண்களுடன் இணைந்து செய்த காரியம்!