இந்தியாவில் திருமணமான 6 நாளில் புதுப்பெண் கடத்தி செல்லப்பட்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் (52). இவர் மகள் ஷோபாவுக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று ஷோபா தனது கணவர் மற்றும் சகோதரர் உடன் வெளியில் சென்றார்.
அப்போது சாலையில் ஷோபாவை சந்தித்த அவர் வீட்டு அருகில் வசிக்கும் மோனு (25) என்ற இளைஞர் அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி அவரை தனி இடத்துக்கு அழைத்து சென்றார்.
பின்னர் அப்படியே ஷோபாவை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றார் மோனு.
இதை பார்த்த அவர் கணவரும், சகோதரரும் அதிர்ச்சியடைந்த நிலையில் அழுது கொண்டே காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த ஷோபாவின் தந்தை கிஷோருக்கு அதிர்ச்சியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் பொலிசார் மோனுவை கைது செய்து ஷோபாவை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.