திருமணத்தில் ரஜினியின் ஆட்டத்தைப் பார்த்திருப்பீங்க! ஆனால் அனிரூத், தனுஷ் என்ன செய்தார்கள் தெரியுமா!

0
475

ரஜினி மகள் சவுந்தர்யா திருமணத்தில் நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் ஆடிப்பாடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. சவுந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகனைத் திருமணம் செய்துள்ளார். நான்கு நாட்களாக இவர்களது திருமணம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினி, ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலானது.

இந்நிலையில் சவுந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் ஆடிப் பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து நடனமாடுகிறார் தனுஷ்.

கூடவே தனது கொலைவெறி பாடலையும் விருந்தினர்களுக்காக மைக்கில் பாடிக் காட்டுகிறார். அதனை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் ரசித்துக் கைதட்டுகின்றனர். அப்போது உறவினரும், இசையமைப்பாளருமான அனிருத்தும் தனுஷ் உடன் இருக்கிறார்.

மேலும், சவுந்தர்யாவின் வரவேற்பு நிகழ்ச்சியில் மாமா ரஜினியும், மருமகன் தனுஷும் ஒரே போன்று உடை அணிந்திருந்ததும் ரசிக்கும்படி அமைந்திருந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மூலம், சவுந்தர்யா வரவேற்பு நிகழ்ச்சியை தனுஷும், அனிருத்தும் சேர்ந்து எவ்வளவு கலர்புல்லாக மாற்றி இருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

Previous articleநடிகை தேனடை மதுமிதாவிற்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா!
Next articleநடுரோட்டில் உட்கார்ந்து செல்பி எடுத்த தல அஜித்! குஷியில் ரசிகர்கள் தீயாய் பரவும் காட்சி!