திருமணத்தில் தனுஷ் மகன் காட்டிய ஸ்டைல்! தாத்தாவுக்கே போட்டியா!

0

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்துக்கொண்டிருப்பவர். அந்த தனித்துவம் இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் அமைந்ததில்லை. அது தான் அவரது ஸ்டைல்.

தன் ஆரம்பகால சினிமா வாழ்க்கையிலே ஸ்டைல், நடை, உடை பாவனை என அத்தனை அம்சங்களாலும் மல மலவென தீவிர ரசிகர் பட்டாளத்தை பெற்ற ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு வலம் வந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று தனது இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதில் தனுஷின் மகன் யாத்ரா புகைப்படம் ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு கூலிங் கிளாஸ் போட்டுகொண்டு போஸ் கொடுத்துள்ள யாத்ரா ஸ்டைலில் தாத்தா ரஜினிகாந்தை தூக்கி சாப்பிட்டுள்ளார்.

தாத்தா நடித்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் ஸ்டைலில் அந்த போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் யாத்ரா. இந்த புகைப்படத்தை பார்த்த ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் யாத்ராவின் போட்டோவை இணையத்தில் தாறுமாறாக ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை தமிழர்களுடன் காதலில் விழுந்த முக்கிய பிரபலங்கள்! காதலே! காதலே!
Next articleபிரபல சீரியல் நடிகருக்கு நடந்த சோகம்! நடுத்தெருவில் நிற்கும் அவலம்!