திருமணத்திற்கு வரும்போது நாற்காலி கொண்டு வரவும்! வைரலாகும் மணமக்கள் வீட்டாரது அழைப்பிதழ்!

0
915

மணமக்கள் வீட்டார் வழங்கிய விநோத திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது மணமக்கள் வீட்டாரால் வழங்கப்பட்ட திருமண அழைப்பிதழில் வருத்தத்தோடு நிராகரிக்கிறேன் அல்லது மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்கிறேன் ஆகிய இரு வாய்ப்புக்களை தேர்வு செய்ய வழங்கியுள்ளனர்.

அதில் பின் குறிப்பாக செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள், திருமணத்துக்கு வரும்போது தயவு செய்து ஒரு நாற்காலியையும், ஒரு சாண்ட்விச்சையும் எடுத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விநோத அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

பொதுவாக திருமணத்துக்கு அழைப்பு விடுத்துவிட்டு வந்த பின், விசேஷம் நடத்துவோருக்கு அவர்களில் எத்தனை பேர் கட்டாயம் வருவார்கள்? என்பதை கணித்து அவர்களுக்கேற்ற உணவு, இருக்கை உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வது கடினமானதாகும்.

பலர் வருகைதராவிட்டால், உணவு வீணாவதோடு, எதிர்பாராமல் வருவோரால் உணவு போதாத சூழல் ஏற்பட்டு விடும். பிரான்ஸ் போன்ற நாடுகளில் RSVP என சொல்லப்படும், நிகழ்விற்கு வருவதை உறுதிப்படுத்தக் கோரும் வழக்கம் உள்ளது.

கடும் நிகழ்வு வேலைகளுக்கு மத்தியில் அழைப்பிதழ் கொடுப்பதும், அவர்களின் வருகையை தொலைபேசி மூலமாக அழைத்து உறுதிப்படுத்திக் கொள்வதும் ஒரு முக்கியப் பணியாகவே பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இறுதி நேரம் வரை வருகையை உறுதிப்படுத்தாதோரால் மணமக்கள் வீட்டாருக்கு சங்கடங்கள் ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டு மணமக்கள் வீட்டார் வினோத அழைப்பிதழை அச்சடித்துள்ளனர்.

அதில், வருத்தத்தோடு நிராகரிக்கிறேன் அல்லது மகிழ்ச்சியோடு அழைப்பை ஏற்கிறேன் ஆகிய இரு வாய்ப்புக்களை தேர்வு செய்ய வழங்கியுள்ளனர். அதில் பின் குறிப்பாக செப்டம்பர் 10 ஆம் திகதிக்குள் வருகையை உறுதிப்படுத்தாதவர்கள், திருமணத்துக்கு வரும்போது தயவு செய்து ஒரு நாற்காலியையும், ஒரு சாண்ட்விச்சையும் எடுத்துக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது மரியாதைக் குறைவாக இருந்தாலும், நடைமுறைக்கு ஏற்ற அழைப்பிதழ் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleதிருமண வீட்டில் சாப்பிட்ட பின்னர் வீட்டுக்கு சென்றவருக்கு மணமகள் வீட்டிலிருந்து வந்த அறிவிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சி!
Next articleதுளி கூட மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால்.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்!