இந்தியாவில் நபருடன் பெண் தவறான உறவு வைத்திருந்த நிலையில் அந்த நபராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் அன்னபிபி ஷேக் (27). இளம் பெண்ணான இவருக்கு திருமணமாகி விட்டது.
இந்நிலையில் தான் பணி செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் கிஸ்மட் (20) என்பவருடன் அன்னபிபிக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
ஆனால் ஒருகட்டத்தில் இந்த உறவை முறித்து கொண்டு திருந்தி வாழ முடிவு செய்த அன்னபிபி, கிஸ்மட்டிடமிருந்து விலகியுள்ளார்.
இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அன்னபிபியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதன்படி இரு தினங்களுக்கு முன்னர் இரவு 10.30 மணிக்கு பணி முடிந்து அன்னபிபி சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தனது நண்பருடன் அவரை வழிமறித்த கிஸ்மட், அன்னபிபியை வயிறு, மார்பு பகுதியில் 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர் கிஸ்மட் தனது நண்பருடன் தப்பி ஓட அங்கிருந்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் கிஸ்மட்டை கைது செய்தனர்.
அன்னபிபியின் சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிஸ்மட்டின் நண்பரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்