சினிமாவில் ரிஸ்க் அதிகமான காட்சிகளில் நடிக்கவேண்டும் என்றால் ஹீரோக்கள் பெரும்பாலும் டூப் பயன்படுத்துவார்கள். ஹீரோக்களே இப்படி என்றால் நடிகைகள் சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் அதிகம் நடிப்பது டூப் ஆகத்தான் இருக்கும்.
அப்படி தமிழ் சினிமாவில் நயன்தாரா, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அசின், என பல முன்னணி நடிகைகளுக்கு டூப் போடுவது ஒரு ஆண் தான். நசீர் என பெயர் கொண்ட ஸ்டண்ட் கலைஞர் தான் அது.
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் த்ரிஷாவுக்கு டூப்பாக குண்டு வெடிக்கும் காட்சியில் தான் இவர் முதன் முதலில் நடித்தாராம். அதன் பிறகு 17 வருடங்களாக தற்போது வரை பல முன்னணி நடிகைகளுக்கு டூப்பாக நடித்து வருகிறார்.