திடீரென்று வெடித்துச் சிதறிய கம்ப்யூட்டர்: பரிதாபமாக இறந்த சாப்ட்வேர் இன்ஜினியர்!

0
390

தமிழகத்தில் கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியதால் சாப்ட்வேர் இன்ஜினியர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அனுமார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததால், தமிழகம் வந்த அவர் இங்கே கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கம்ப்யூட்டரை ரகுநாதன் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, தீடிரென கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியதால் தூக்கி வீசப்பட்டார்.

வெடிச்சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து தீக்காயங்களுடன் இருந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.

இறந்த ரகுநாதனின் தந்தை துரைப்பாண்டியன் ஓராண்டுக்கு முன்பு வீட்டில் இருக்கும்போது கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டி உயிரிழந்தார்.

அந்த சோகத்தில் இருந்து உறவினர்கள் இன்னும் வெளி வர முடியாமல் இருக்கும் நிலையில் ரகுநாதன் கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறி இறந்திருப்பது உறவினர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க இங்கே அழுத்தவும்

Previous articleஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் முதல்வரின் மகன்!
Next articleசல்மான் கான் சிறையில் அடைக்கப்பட்டார்!வருத்தத்தில் பாலிவுட்!பல‌ கோடிகள் நஷ்டமா?