Home thatstamil one india tamil oneindia tamil தாய், மகளை கொலை செய்த ஜோதிடரை காட்டிக் கொடுத்த போலீஸ் மோப்ப நாய் ஜான்சி!

தாய், மகளை கொலை செய்த ஜோதிடரை காட்டிக் கொடுத்த போலீஸ் மோப்ப நாய் ஜான்சி!

0
653

சென்னை ஆவடி எச்விஎப் தொழிற் சாலை அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் அருண்பாண்டியன். ஊசி, பாசி மணி வியாபாரம் செய்பவர். இவரது மனைவி ரோஜா (25). இவர்களது மகள் சுஜாதா(3). கடந்த 2 நாட்களுக்கு முன்பு அருண்பாண்டியன் வியாபாரத் துக்கு சென்றுவிட்டார். ரோஜா வும், சுஜாதாவும் வீட்டில் இருந் தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் வீட்டுக்குள் ரோஜாவும், சுஜாதாவும் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

போலீஸார் விசாரணையில், அதே பகுதியில் தங்கியிருந்த காட்பாடியைச் சேர்ந்த கைரேகை ஜோதிடர் வீரகுமார் (22) என்பவர் இக்கொலையை செய்தது தெரிய வந்தது. போலீஸார் வீரகுமாரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: எங்கள் விசாரணையில் வீரக்குமாரை இரவில் ரோஜா வீட்டருகே பார்த்ததாக சிலர் கூறினர். சந்தேகத்தின்பேரில் அவரையும், மேலும் 4 பேரையும் பிடித்து விசாரித்தோம்.

இந்த நேரத்தில் போலீஸ் மோப்ப நாய் ஜான்சியை, சம்பவ இடத்துக்கு அழைத்து வந்து சோதனை செய்தோம். வீட்டுக்குள் சிறிது நேரம் மோப்பம் பிடித்த ஜான்சி, அதே பகுதியில் வீரக்குமார் தங்கி இருந்த வீட்டை சிறிது நேரம் சுற்றி வந்தது. பின்னர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆவடி காவல் நிலையத்தை நோக்கி வேகமாக ஓடியது. இங்கே எதற்கு செல்கிறது என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது.

காவல் நிலையத்துக்குள் புகுந்த ஜான்சி, நேராக சென்று வீரக்குமாரின் கையை கடுமை யாக கடித்து இழுக்க ஆரம் பித்தது. அதன்பின்னரே தீவிர விசாரணை நடத்தியதில் வீரக் குமார், கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ஜான்சி கடித்ததில் ஏற்பட்ட காயத்துக்காக அவ ருக்கு மருந்து கொடுத்து இருக் கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Previous articleசந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு!
Next articleமேஷம் – ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் (13.02.2019 முதல் 31.08.2020 வரை)