தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பது போல அழகு ரகசியங்களும் ஒளிந்து இருக்கின்றன!
தாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மட்டுமன்றி, குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் என்பனவற்றின் அத்திவாரமாகவும் காணப்படக் கூடிய மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.
தாய்ப்பாலை சிறிது எடுத்து முகத்தில் பூசினால் சூடு கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
முகத்தில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் கருவளையங்களில் தாய்ப்பாலை காட்டன் துணியால் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் நீக்கலாம்.
தாய்ப்பாலை சிறிது தேனுடன் கலந்து 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் 15 நிமிடம் முகத்தில் பூசி வாரத்திற்கு 2 முறை மசாஜ்செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து கரும்புள்ளிகள் நீங்கும்.
தினமும் ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து கொண்டு அதனை முகத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவும் போது மங்கிப்போன உங்கள் முகம் மிகவும் பொலிவு பெறும்.
சிறிது முல்தானி மட்டியை எடுத்து கொன்டு அதனுடன் தாய்ப்பாலை சேர்த்து கலந்து பெறப்படும் ஃபேஸ் மாஸ்க்கை முகத்தின் 15 நிமிடம் போட்டு கழுவி வரும் போது முகம் அதிக மினுமினுப்படையும்.
வறண்டு போன உதடுகளில் தாய் பாலால் ஒத்தடம் கொடுத்தால் ஈர்ப்பதுடன் எப்போதும் இகாணப்படுவதுடன்,; உதடுகள் வெடிப்பு வந்து புண் ஆகுவதனையும் தடுக்கும்.
ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் மாவு, சிறிது தேன் மற்றும் சிறிதளவு தாய்ப்பால் ஆகியனவற்றை எடுத்து நன்கு கலந்து, சிறிது நேரம் குளிர வைத்து பினனர் முகத்தில் 15 நிமிடம் பூசி, வாரத்திற்கு 1 முறை காட்டன் துணியால் நீரில் நனைத்து துடைத்து வரும் போது சொரசொரப்பான வறண்ட சருமம் மொழு மொழுவென மாற்றம் பெறும்.
By: Tamilpiththan