தாயுடன் கள்ளக் காதல்! அரசு மருத்துவமனை ஊழியரை போட்டுத் தள்ளிய மகன்!

0

சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர். இவருடைய மகன் தமிழ்செல்வன். சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவனையில் . மருந்தாளுநராக பணி புரிந்து வருகிறார்.

இவர் நேற்று காலை 11 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு மாடியில் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒக்கூரை சேர்ந்த அருண்குமார் என்பவர், தமிழ்செல்வனுடன் தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வன் இறந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தமிழ்செல்வன் இறந்ததை தொடர்ந்து அருண்குமார் அவருடைய உடல் கிடந்த இடத்தின் அருகில் கத்தியுடன் சென்று உட்கார்ந்து விட்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தகவலறிந்து சிவகங்கை நகர் பொலிசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன், அருண்குமார் தாயாருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதை அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அருண் குமாரின் தாயார் வீட்டில் இல்லாததால், அவரை தேடி சிவகங்கைக்கு வந்தார். அங்கு தனது தாயார் குறித்து விசாரித்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்செல்வனை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, அங்கேயே உட்கார்ந்ததிருந்தது தெரியவந்தது. பட்டதாரியான அருண்குமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅனைவரையும் அடேங்கப்பா! என வாய் பிளக்க வைத்த ஆண்ட்ரியா!
Next articleவாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் கணவன்! விபரீத முடிவெடுத்த காதல் மனைவி!