இந்தியாவின் கேரள மாநிலத்தில் 7 வயது சிறுவன் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு இரையான சம்பவத்தில், அதன் தாயாரின் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு இரையான சிறுவன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதால் போஸ்கோ சட்டத்திலும் குறித்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் படித்துவரும் 7 வயது சிறுவன், சமீப நாட்களாக எவருடனும் பேசாதது கண்டு ஆசிரியர்கள் காரணம் விசாரித்துள்ளனர்.
அதற்கு தமது தந்தை இறந்ததாக மட்டும் சிறுவன் பதிலளித்துள்ளான். இந்த நிலையில், வியாழனன்று அதிகாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தாயாரும் அவரது காதலரும் சிறுவனை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுவன் படுகாயமடைந்தது தொடர்வில் இருவரும் இருவேறு காரணங்கள் தெரிவித்த நிலையில், சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஆம்புலன்ஸில் ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை டவுனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், அந்த நபர் குறித்து விசாரித்துள்ளனர்.
அதில், அந்த நபரின் பெயர் அருண் ஆனந்த் எனவும், படுகாயமடைந்த சிறுவனின் தந்தை மரணமடைந்த பின்னர், அவரது மனைவியுடன் வாழ்ந்துவருவதும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, போதை மருந்து பழக்கம் கொண்ட அருண், தமது காதலியின் இரு மகன்களையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.
சம்பவத்தன்று, படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக அந்த 7 வயது சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் அருண்.
சிறுவனின் காலில் பிடித்து தூக்கி தரையில் வீசியதில் சிறுவன் சுய நினைவை இழந்துள்ளான். மட்டுமின்றி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் ஆணுறுப்பிலும் காயம் ஏற்பாட்டுள்ளது.
இதனையடுத்தே சிறுவனை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் புதிய குடியிருப்புக்கு மாறியது முதல் தன்னையும் தனது பிள்ளைகளையும் அருண் கொடுமைப்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிசாரிடம் குறித்த பெண்மணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவரும் சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும், மேலும் இரண்டு நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.