தவறான நபருடன் லெஸ்பியன் உறவு – தாயை அடித்து கொன்ற மகள்!

0
495

ஆசிரியையுடனான ஓரினச் சேக்கையை நிறுத்திக் கொள் என கண்டித்த தாயை, அவரது மகளே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ரஷ்மி ரானா என்ற மகள் உள்ளார். ரஷ்மி தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

ரஷ்மி கல்லூரியில் தனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியையோடு லெஸ்பியன் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ரஷ்மியின் தாயாருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், ரஷ்மியை கண்டித்துள்ளார்.

மேலும் ஆசிரியையுடன் பழகுவதை நிறுத்துக் கொள் என எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரஷ்மி தாயை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார்.

இதனையடுத்து ஆசிரியையோடு சேர்ந்து ரஷ்மி தனது தாயான புஷ்பாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் புஷ்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் ஆசிரியையையும், ரஷ்மியையும் கைது செய்த பொலிசார் அவர்களை சிறையில் அடைத்தனர். பெற்ற தாயை மகளே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதம்பியை தண்டிக்காமையால் தமக்கை தூக்கிட்டு தற்கொலை!
Next articleகழிவறையில் இளம்பெண் அடித்துக்கொலை…. உயிருக்கு போராடும் கணவர்!… நடந்தது என்ன?