தளபதி விஜய் பல கோடியை ஒதுக்கியுள்ளாரா?
தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நம்ம தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரூ 300 கோடிக்கும் மேல் வசூல் ஆகி சாதனை செய்தது.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகத்தினா் நிதியுதவி அளித்து வரும் நிலையில், நடிகர் ராகவா லோறன்ஸ் அவா்கள் 3 கோடியும், அஜித் ரூ. 1.25 கோடியும் நிதியுதவியாக அளித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் எந்த ஒரு நிதியுதவியும் அளிக்காத நிலையில், ஊரடங்கு சட்டம் முடிந்தவுடன் அவர் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் அந்தந்த பகுதிக்கு நிதியுதவி அளிக்க உள்ளாராம். இதற்காக அவர் பல கோடிகளை ஒதுக்கியுள்ளார் என்ற நியூஸ் வைரல் ஆகி வருகிறது.
By: Tamilpiththan





