தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அவர் தமிழகத்தில் எந்த அளவிற்கு மாஸ் ஹீரோவாக இருக்கின்றாரோ அதே அளவிற்கு கேரளாவிலும் கொண்டாடப்படுபவர்.
இந்நிலையில் கேரளாவில் பெரும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு பல நடிகர், நடிகைகள் தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர்.
தனது கோட்டையாக கருதப்படும் கேரளா மக்களுக்கு விஜய் ஏதும் செய்யவில்லையா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
ஆனால், விஜய் நேரடியாக தான் எந்த பணத்தையும் தரவில்லை, மற்றப்படி தன் ரசிகர்கள் மன்றங்கள் வாயிலாக விஜய் தரப்பு பல உதவிகளை செய்து தான் வருகின்றனர்.
பல விஜய் ரசிகர்கள் கேரளாவில் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து தான் வருகின்றார்களாம்.




