தளபதி ரசிகர்களுக்கு விழுந்த பேரதிர்ச்சி! விஜய், தனுஷுடன் மோத இருக்கும் மற்றொரு படத்தின் ரிலீஸ் உறுதியானது!

0
474

விஜய் நடிப்பில் சர்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட இந்த படத்தின் ஷூட்டிங்கில் இன்னும் டப்பிங் மற்றும் ப்ரோமோஷன் வேலைகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு இந்த படம் மட்டும் தான் ரிலீஸாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் போட்டிக்கு தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸாகும் என நேற்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

தற்போது இவ்விரு படங்களுக்கும் போட்டியாக தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்த R.K.சுரேஷ் நடித்திருக்கும் பில்லா பாண்டி ரிலீஸாகவுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த படம் தீபாவளிக்கு தான் ரசிகர்களால் சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று அதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படமெல்லாம் விஜய், தனுஷிற்கு போட்டியாக வருமா என கேட்டால் கண்டிப்பாக வரும். ஏனென்றால் இந்த படத்தில் சுரேஷ் பயங்கர அஜித் ரசிகராக நடித்துள்ளார். ஆதலால் அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்கே செல்ல கூடும்.

Previous articleஉயர்நீதிமன்றம் வழங்கிய‌ அதிரடி தீர்ப்பு! சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலையில் சிக்கியவருக்கு!
Next articleவிஜய் செய்த விஷயம்- நெகிழும் சின்னத்திரை பிரபலம்