தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, கூந்தலை ஜொலிக்க வைக்க ஆரஞ்சு தோல் சிகிச்சை!

0

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை. உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா. இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள். இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம். தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது.

ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை:

உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ. எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள். அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

Previous articleதூக்கத்தில் யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா?
Next articleவிநாயகர், நாகர் சிலைகள் மரத்தடியில் இருப்பதன் ரகசியம் என்ன?