தலைமறைவான, வித்தியா கொலை வழக்கின் பொலிஸ் அதிகாரிக்கு வலை வீச்சு!

0
485

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள்ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகஜன் தலைமறைவானார்

இந் நிலையிலேயே நேற்று வழக்கை விசாரித்த யாழ். புங்குடுத்தீவு மஜிஸ்திரேட் ஸ்ரீகஜனை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Previous articleவெடிப்புகள் ஏற்படுவதால் பதற்றம்! கொழும்பில் பற்றி எரியும் பிரபல ஆடை விற்பனை நிலையம்!
Next articleமட்டக்களப்பில்! இளம் தமிழ் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!