தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான லோகேஸ்வரி தாய், தன் மகளை நினைத்து தினந்தோறும் அழுது கொண்டிருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த ஜுலை மாதம் 13-ஆம் திகதி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது.
அப்போது லேகேஸ்வரி என்ற பெண்ணை மாடியிலிருந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளிவிட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பயிற்சியாளர் லோகேஸ்வரியை தள்ளிவிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. அதன் பின் தமிழக அரசு 5 லட்ச ரூபாயும், கல்லூரி சார்பில் 6 லட்சம் ரூபாயும் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில் பிரபல தமிழ் ஊடகம் ஒன்று லோகேஸ்வரியி தாய் மற்றும் தந்தையிடம் லோகேஸ்வரி பற்றி கேட்டுள்ளனர்.
அப்போது லோகேஸ்வரியின் தாய் வேகமாக சென்று அந்த புகைப்படங்களை எடுத்து கண்ணீர்விட்டு மகளைப் பற்றி கூறியுள்ளார்.
எங்களுக்கு இரண்டு குழந்தைகள், பெரியவனின் பெயர் சுரேஷ், சின்னவளின் பெயர் தான் லோகேஸ்வரி. மிகவும் தைரியமாக இருப்பாள்.
ஆம்பளை மாதிரி இருப்பாள், அவளுக்கு பொலிஸ் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நீ குண்டா இருக்க உனக்கு இது செட் ஆகாது என்று கூறினாலும், அவள் அதை எல்லாம் கேட்கமாட்டாள்.
வைராக்கியம் அவளுக்கு அதிகம், முதலில் தான் பொலிஸ் ஆகிவிட்டு அண்ணுக்கு கல்யாணம் செய்து பின்னரே தான் கல்யாண்ம செய்துகொள்வேன் என்று கூறுவாள்.
அண்ணன் என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். சம்பவம் நடந்த அன்று கூட ஏதோ பரீட்சை என்று தான் சொல்லிவிட்டு சென்றாள், இது போன்ற பயிற்சி என்று அவள் சொல்லவில்லை, சொல்லியிருந்தாள் அவளை அனுப்பியிருக்கமாட்டேன்.
மேலும் திபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவள் பிறந்தாள், ஒவ்வொரு ஆண்டும் அவளுடன் தீபாவளியை கொண்டாடுவோம், ஆனால் இந்த வருடம் என்று அழுதுள்ளார்.
மூன்று முறை அவளுக்கு விபத்து நடந்துருக்கு, அப்போ எல்லாம் தப்பிச்சவ, இப்படி இறந்து போயிட்டா. அந்த வீடியோவ பார்த்த போது செத்துகூட போயிடலாம் என்று தோன்றியது, அதன் பின் பல காரணங்களுக்காக விட்டுவிட்டோம் என்று, தற்போது அவளுடைய உடை, போன், வண்டியை பார்த்து அடிக்கடி அழுகிறோம் என்று கூறியுள்ளார்.





