புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடு தொடர்பிலும், தமிழ் மக்களை ஏமாற்றியமை தொடர்பிலும், அதிர்ச்சியாக உள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
குடும்ப அரசியல் மற்றும் ஜனநாயக எதிர்ப்பு செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் மற்றும் சர்வதேசத்தில் இருந்தும் மாற்றம் ஒன்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஜனாதிபதி பொது வேட்பாளராக, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிய அரசியல் கட்சி அவருக்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றி பெறச் செய்தது.
எனினும் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சீர்குலைத்து, மீண்டும் மோடியாளர்களுடன் ஒன்றிணைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.