தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார்!

0

வட மாகாணத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காரணமாக வடக்கில் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

குறிப்பாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை பொலிஸாரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளதனால் சட்டத்தை அமுல்படுத்துவதில் பொலிஸ் திணைக்களம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு தீர்வு வழங்கும் முகமாகவே இம்முறை வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேஸநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதனது ஜாடையில் இல்லாத குழந்தைகள்! இரக்கமின்றி தந்தை செய்த கொடூரம்!
Next articleபரம எதிரி பாகிஸ்தானுடம் மோதும் இந்தியா! பிரதமர் இம்ரான் சொன்ன வார்த்தை இது தான்!