தமிழிசைக்கு இப்படி ஒரு உறவு முறை இருக்கா ? சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல கிளைகள் உள்ளன. மேலும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன்னா,அந்த அளவிற்கு அவர் தன்னுடைய நகைக் கடை விளம்பரத்தின் மூலம் மக்களிடையே பிரபலமாகி உள்ளார். தற்போது சினிமா திரையுலகிலும் கால் பதிக்க போகிறார்கள் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னைக்கு வந்தவர் ‘சரவணா செல்வரத்தினம்’. இவர் தன்னுடைய கடுமையான உழைப்பால் இந்த அளவிற்கு வாழ்வில் உயர்ந்து உள்ளார்.
மேலும், சரவணா செல்வரத்தினத்தின் மகன் தான் சரவணன் அருள். சரவணன் அருள் தற்போது சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். முதலில் ஜவுளி கடையில் ஆரம்பித்து தற்போது நகைக்கடை என பல ஊர்களில் கிளைகளைத் தொடங்கி பிரபலமாகி உள்ளார்கள். மேலும், இவர்கள் நல்ல நிலைக்கு முன்னேறி வந்தவுடன் தனது சகோதரர்களான யோகரத்தினம், ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுடைய நிறுவனத்திலேயே சேர்த்துக் கொண்டு கடைகளை கவனித்து வந்தார்கள். சரவணா செல்வரத்தினம் இறந்த பிறகு சகோதரர்களுக்குள்ளேயே சண்டை வந்தது. அதனால் சொத்துக்கள் எல்லாம் பிரிக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் தான் “லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ்” என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய கடையை ஆரம்பித்த நாட்களில் இருந்தே விளம்பரங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் உடையவராக இருந்தார். இவருடைய முதல் விளம்பரத்தில் இருந்து இப்போது வரை பல பேர் சரவணன் அருளை விமர்சனம் செய்து வந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் பயங்கரமாக கலாய்த்தும், கிண்டலும், கேலியும் செய்தார்கள். ஆனால், இவர் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. மேலும்,இவருடைய கவனம் முழுவதும் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் தெரியும் என நினைத்தார்.
ஆனால், இவருடைய காமெடி நடிப்பினால் ஜவுளி,நகை கடை என அனைத்தும் பிரபலமாகி விட்டது எனவும் சொல்லலாம். மேலும், சரவணன் அருளுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இந்நிலையில் அவர்கள் இரண்டு பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இருந்த போதிலும் சிறு வயது உடைய இளைஞன் போல் துணிகளை அணிந்து கொண்டு விளம்பரத்தில் நடித்து உள்ளார். மேலும்,சரவணன் அருள் படங்களில் நடிக்கப் போகிறார் என தகவல் தெரிந்தவுடன் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் , சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசையும் நெருங்கிய உறவுகாரர்கள் என்ற தகவல் வந்தவுடன் தமிழகத்தையே பதற வைத்தது என்று சொல்லலாம். எப்படின்னு பார்த்தால் தமிழிசையின் தாயார், அருள் மனைவியின் தாயாருக்கு சின்னம்மாள் உறவு முறை. அப்ப தமிழிசைக்கு அருள் மனைவி அக்காள் மகள் உறவு என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நம்ம சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் அண்ணாச்சிக்கு தமிழிசை மாமியார் உறவுமுறை. இதை தெரிந்தவுடன் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.