தமிழகத்தில் 34 வகையான அத்தியாவசிய கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி.
தமிழகத்தில் கொரோனா நோயினை தடுப்பதற்காக ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு,மே 9 நேற்று சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள், தேநீர் கடைகள் போன்றவை திறக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
34 வகையான அத்தியாவசிய கடைகள் நிபந்தனைகளுடன், அதாவது சமூக இடைவெளி, உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் மட்டும் வழங்குதல் என பல நிபந்தனைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்)
2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்)
3) உணவகங்கள் (பார்சல் மட்டும்)
4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்
5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள்
6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள்
7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள்
9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள்
10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள்
11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்
12) கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள்
13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை)
14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும்
15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள்
16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள்
17) பெட்டி கடைகள்
18) பர்னிச்சர் கடைகள்
19) சாலையோர தள்ளுவண்டி கடைகள்
20) உலர் சலவையகங்கள்
21) கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ்
22) லாரி புக்கிங் சர்வீஸ்
23) ஜெராக்ஸ் கடைகள்
24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள்
25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள்
26) நாட்டு மருந்து விற்பனை கடைகள்
27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள்
28) டைல்ஸ் கடைகள்
29) பெயிண்ட் கடைகள்
30) எலக்ட்ரிகல் கடைகள்
31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள்
32) நர்சரி கார்டன்கள்
33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள்
34) மரம் அறுக்கும் கடைகள்
By: Tamilpiththan