தமிழ் சினிமாவில் பல சமூகம் சார்ந்த குடும்பம் சார்ந்த திரைப்படங்களை இயக்கி பல சாதனைகளை புரிந்தவர் சேரன். இவர் இயக்குனராகவும், நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்குகிறார்.
இதுமட்டுமல்லாது, இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய இருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சேரன் பங்கு பெற்றார்.
இந்நிலையில், 90 நாட்கள் இருந்துவிட்டு, கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.
இதற்கிடையில், சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை லாஸ் லியாவை தான் மகளாக நினைத்து பழகி வந்தார்.
இந்நிலையில், சேரனுக்கு இரண்டு மகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சேரனின் இளைய மகள் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்ற போது லாஸ்லியாவிடம் பேச வேண்டாம். அப்படி பேசினால் நீங்கள் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறி இருந்தார்.
இதற்கு முக்கிய காரணமே லாஸ்லியா பல முறை சேரன் விட்டு கொடுத்தால் தான்.
இருப்பினும் இறுதி வரை சேரன் லாஸ்லியாவை விட்டு கொடுக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சேரன் தனது மகளுடன் அணைத்து கவலைகளுடன் நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகளவில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், இவ்வளவு பாசமான, அழகான மகளை விட்டு, லொஸ்லியாவை மகள் என்று கூறி கவலைப்பட்டு வந்தீர்களே சேரன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.