தங்கையை துஸ்பிரயோகம் செய்த சகோதரன்!

0
384

11 வயதான தனது சகோதரியை இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்த தனது மூத்த சகோதரர், இந்த மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பளை ஏத்கால பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

எனவே, தாய் இல்லாத சிறுமி , இரண்டு வருடங்களாக வீட்டிலேயே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த சிறுமியின் தாயார் வீட்டிற்கு வந்திருந்தபோது, தனது மூத்த மகனின் செயல்கள் பிடிபட்டபின், கம்பளை பொலிஸிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தை அறிந்த கொண்ட சந்தேக நபர் வீட்டை வீட்டு ஓடிச்சென்றுள்ளார்.

இந்த நிலையில் மகியங்கணை பிரதேசத்தில் மறைந்திருந்தவேளை பொலிஸாரால்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous articleதிரும்பத் திரும்ப சூடுபடுத்திச் சாப்பிட கூடாத உணவுகள்!
Next articleமழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க நாம் செய்ய வேண்டியவை!