Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan தங்கத்தை பிரசாதமாக தரும் கோவில்! எங்கு தெரியுமா?

தங்கத்தை பிரசாதமாக தரும் கோவில்! எங்கு தெரியுமா?

0
1516

வழக்கமாக நாம் கோவிலுக்கு சென்றால் திருநீரு, குங்குமம், பூ சில சமயங்களில் பழம், பொங்கல் போன்றவற்றையே பிரசாதமாக வழங்குவார்கள்.

ஆனால், மத்திய பிரதேசத்தில் இரத்னபுரி என்னும் ஊர் தங்கத்திற்கு புகழ் பெற்றது.

இந்த ஊரில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பக்தர்களுக்கு தங்கம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை.

காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர்.

வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போன்று குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

தீபாவளி நாளன்று அந்த காணிக்கை தங்கம் மற்றும் வெள்ளியினை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இதே போன்று ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது.

Previous articleசெல்வம் கொழிக்க அனுமனுக்கு செவ்வாய் கிழமை இந்த பொருட்களை படையுங்கள்!
Next articleபாம்புக்கு பால் ஊற்றுவதன் ரகசியம் தெரியுமா?