டிசம்பர் மாதத்தில் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீத ராஜயோகம்! யாருக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும் தெரியுமா?
2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன.
இந்த மாத இறுதியில் நிகழும் இந்த கிரக சேர்க்கையில் சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் 15 நாட்களுக்கு மேல் தனுசுவில் கூடியிருக்கும்.
டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார்.
டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.
இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும். குறிப்பாக கடகம் மற்றும் சிம்ம ராசியின் பலன்களை இன்று பார்க்கலாம்.
கடகம்
இந்த மாதம் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் இருந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்பட்டு மாத பிற்பகுதியில் கடன் வாங்குவீர்கள். சிலர் நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவீர்கள். சுப கடன்கள் வாங்குவீங்க. வீட்டு கடன்கள் வாங்குவீங்க. நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு உயர்வான காலகட்டம். சூரியன் ஆறாம் வீட்டிற்கு நகரும் போது அரசு அதிகாரிகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லஞ்சம் வாங்காதீங்க, கண்டிப்பாக மாட்டிப்பீங்க.செவ்வாய் இந்த மாதம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அவர் மாத இறுதியில் ஐந்தாம் வீட்டிற்கு நகரும் போது இடமாற்றம் வேலை மாற்றம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சூரியன் நான்காம் வீட்டில் இருக்கிறார் 17 ஆம் தேதி ஐந்தாம் வீட்டிற்கு போகிறார். பஞ்சம ஸ்தானத்தில் ஐந்து கிரகங்கள் கூடுகின்றன. நன்மைகள் நடக்கும் பிள்ளைகளுக்கு யோகமான காலம்.
ராகு பகவான் லாபத்தில் இருந்து குரு பார்வை பெறுவதால் பண வரவு அதிகமாகும். உங்க தகவல் தொடர்பு அற்புதமாக இருக்கும். காரணம் இரண்டாம் அதிபதி புதன் மூன்றாம் வீட்டில் இணைந்திருக்கிறார். மாணவர்களுக்கு அதிர்ஷ்டமான மாதம்.
கல்வியில் முன்னேற்றம் வரும். வியாபாரிகள், தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம், முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பெண்களுக்கு முன்னேற்றமான காலகட்டம் நல்லதாக நடக்கும்.
கவனம் தேவை
கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம். டிசம்பர் 25,26,27 ஆம் தேதி ஆறு கிரகங்கள் இணைகின்றன, அது ஆறாம் வீடு பெரிய முடிவுகள் எதுவும் எடுக்காதீங்க. கல்வி, வேலை தொடர்பான முடிவுகள் எதுவும் 25ஆம் தேதிக்கு மேல எடுக்காதீங்க. டிசம்பர் 15 சுக்கிரன் இடம் மாறுகிறார். சுப செலவுகள் ஏற்படும், புதன் டிசம்பர் 5ஆம் தேதி இடம் மாறுவதால் மாணவர்களுக்கு நன்மை நடக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனம், பழனி முருகனை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிம்ம ராசி
செவ்வாய் முன்றாம் வீட்டில் இருப்பதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடு சொத்து வாகனம் வாங்கும் யோகம் வரும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும். சிம்மத்தில் பிறந்தவர்கள் மாத பிற்பகுதியில் சுக்கிரன் சஞ்சாரம் சரியில்லை.
வேலையில் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருங்க, தொழில் கிரகம் ஆறாம் வீட்டிற்கு நகரும் காலத்தில் விபரீதமான முடிவுகளை தருகின்றன. வேலை மாறுவதற்கு இது சரியான காலகட்டமல்ல. தொழில் தொடங்குவதற்கும் இது சரியான நேரமல்ல.
உடம்புல சின்னச் சின்ன உபாதைகள் வரலாம். ஆன்மீகவாதிகளுக்கு அற்புதமான காலம், கண்ணியமாக இல்லாட்டி பிரச்சினையாகிவிடும். இளைஞர்களுக்கு காதல் வர வாய்ப்பு உள்ளது. இளம் பெண்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்க இல்லாட்டி சிக்கல்ல மாட்டிப்பீங்க.
மாத இறுதியில் ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. மன குழப்பம் வரும், வேலை மாற நினைப்பீர்கள், புதிய தொழில் தொடங்கலாமா என்று தோன்றும், பிள்ளைகள் வழியே தொல்லைகள் ஏற்படும்.
மன உளைச்சல் ஏற்படும் என்றாலும் செவ்வாய் உங்களை காப்பாற்றுவார். மாத இறுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தேவையில்லை, வேலையில் விழிப்புணர்வோடு இருங்க. வீட்ல வீண் விவாதங்கள் வேண்டாம் தவிர்த்து விடுங்க.
அமைதியாக இருங்க பிரச்சினைகள் சரியாகும். கால பைரவரை வழிபடுங்க ரொம்ப நல்லது.