டிஎன்ஏ சோதனையில் தெரிந்த உண்மை, முதல் குழந்தை பிறந்த அடுத்த 4 வாரத்தில் மீண்டும் தந்தையான பெரும் கோடீஸ்வரர்? அயர்லாந்தை சேர்ந்த மிக பெரிய கோடீஸ்வரரான Conor McGregor தான் தனக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை என இளம் பெண் கூறிய நிலையில் டிஎன்ஏ பரிசோதனையில் அது உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
அயர்லாந்தில் உள்ள கோடீஸ்வர விளையாட்டு வீரர்களில் Conor McGregor-ம் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு €140 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் Murray (26) என்ற இளம் பெண் McGregor-ஐ கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு விழாவில் சந்தித்து நட்பானதாகவும் பின்னர் இருவரும் இரண்டு முறை உறவு கொண்டதன் காரணமாக தான் கர்ப்பமானதாகவும் கூறியிருந்தார்.
மேலும் Murray-க்கு அதே ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இரண்டு வயதாகவுள்ளது.
இதையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு McGregor தான் தந்தை என்பதை அவர் ஒப்பு கொள்ள மறுப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நாட்டில் மிகவும் பிரபலமான மனிதராக அறியப்படும் McGregor மீதான குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் மீதான குற்றச்சாட்டை McGregor மறுத்த நிலையில் அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது McGregor-க்கு எடுக்கப்பட்ட டிஏன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், Murrayக்கு பிறந்த குழந்தைக்கு அவர் தந்தையில்லை என உறுதியாகியுள்ளது.
மேலும் Murray இந்த குற்றச்சாட்டை முன் வைப்பதற்கு நான்கு வாரத்துக்கு முன்னர் தான் McGregor தந்தையானார். அதாவது அவரின் நீண்டநாள் காதலி Dee Devlin-க்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதது அவரை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. அவர் மீது குற்றச்சாட்டை முன் வைத்த Murray மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.