தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்து வரும் டிசம்பர் மாதத்துடன் 3 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்னும் அவரின் மரணம் மர்மமாக தான் உள்ளது.
சினிமாவில் பெரும் ஆளுமையாக இருந்த அவரை மிகவும் அதிகம் நேசிப்பவர் நடிகை விந்தியா. இவர் சங்கமம், ரெட் என முக்கிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் மேடைகளில் தன் சூறாவளி பேச்சால் ஜெயலலிதாவை திரும்பி பார்க்கவைத்து பாராட்டும் வாங்கியவர். கட்சியில் நட்சத்திர பொறுப்பாளராக இருந்தவர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் நடிகை விந்தியா நேற்று ஆந்திராவில் இருந்து சென்னை வந்து மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
தன்னுடை தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களையும் சமாதியில் வைத்து வணங்கி அங்கிருந்த மக்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.