செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்கு தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும்.

0

செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும்.

பரிகார காலம்

சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய்பிறை பட்சத்திலும் செய்ய வேண்டும்.

குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சன்னதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.

செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.

பரிகாரம் செய்யகூடாத நேரம்

ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 05.10.2021 Today Rasi Palan 05-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 08.10.2021 Today Rasi Palan 08-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!