செவ்வாய்தோஷம் உள்ள பெண்! தோஷம் இல்லாத ஜாதகரை திருமணம் செய்யலாமா!

0

செவ்வாய் தோஷம் குறித்து ஜோதிட நூல்களில் பல்வேறு கோணங்களில் விவரிக்கப்பட்டு உள்ளது. இவ்விஷயத்தை அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும். பொதுவாக செவ்வாய் இரத்தத்திற்கு உரிய கிரகம். ரத்த அணுக்களுக்கு உரிய கிரகம்.

ஒரு சொட்டு விந்தணுவுக்கு 10 சொட்டு இரத்தம் எனக் கூறப்படுகிறது. எனவே, உடல் உறவுக்கு உரிய கிரகமாகவும் செவ்வாய் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவரது உடல் உறவின் தன்மையை அல்லது காமத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடியதும் செவ்வாய்தான்.

தாம்பத்ய வாழ்க்கையில் முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணிற்கு, செவ்வாய் தோஷம் உள்ள ஆடவனை திருமணம் செய்து வைக்கக் கூறுகிறோம்.

திருமணம் என்பது ஆணையும், பெண்ணையும் உடல் ரீதியாக சேர்த்து வைத்தல். அதற்கடுத்தது குழந்தை பாக்கியம், மகிழ்ச்சி, வளமான வாழ்க்கை உள்ளிட்டவை இடம்பெறும். இதில் தாம்பத்தியத்தில் ஒருத்தருக்கு திருப்தி கிடைத்து மற்றவருக்கு திருப்தி கிடைக்காமல் போனால், ஏமாற்றமடைந்தவர் மற்றொரு துணையைத் தேடுவது போன்ற சிக்கல் ஏற்படும்.

எனவே, இதுபோன்ற முரண்பாடுகள் உருவாவது எதில் என்று பார்த்தால், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷம் இல்லாத ஒருவரை திருமணம் செய்யும் தருணங்களில் இது அதிகளவு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே செவ்வாய் தோஷம் உள்ளவர்களை, செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்ய வலியுறுத்துகிறோம்.

இதேபோல் ரத்தத்தில் ஆர்.ஹெச் பேக்டர் (RH Factor) என்ற தன்மையும் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், அந்த தோஷம் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கும். இதனால் தோஷம் உள்ளவர்களுக்கு தோஷம் இல்லாதவரை திருமணம் செய்து வைப்பதால் குழந்தை பாக்கியத்திலும் பிரச்சனை ஏற்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜாதி என்பதற்கு ஜோதிட அடிப்படை இருக்கிறதா!
Next articleசெவ்வாய் தோஷம் உள்ளவர்களின் காம உணர்வுகள் பற்றி!